ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

முதல் 51 பாடல்கள்

காப்பு
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உ ருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனைபதம் பணிவாம்

நூல்

ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானை சகோதரனே. (1)

உ ல்லாச நிராகுல, யோக, இதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே. (2)

வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோதயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே.(3)

வளைபட்டகை மாதொடு, மக்கள் எனும்
தளைபட்(டு), அழியத் தகுமோ? தகுமோ
கிளைபட்(டு) எழுசூர் உ ரமும் கிரியும்,
தொளைபட்(டு) உ ருவத் தொடு வேலவனே. (4)

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந்து மொழிந்திலனே
அகம், மாயை, மடந்தையர் என்(று), அயரும்
சக மாயையுள் நின்று தயங்குவதே. (5)

திணியான மனோசிலை மீது, உ னதாள்
அணியார் அரவிந்தம் அரும்பு மதோ
பணி யா? என, வள்ளi பதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே. (6)

கெடுவாய் மனனே கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள் படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. (7)

அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட, மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. (8)

மட்Yடுர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்Yடுசல் படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்Yடுடற, வேல் சயிலத்(து) எறியும்
நிட்Yடுர, நிராகுல நிர்ப்பயனே. (9)

கார் மா மிசை காலன் வரின், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே. (10)

கூகா எனஎன் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசலவேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே. (11)

செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12)

முருகன், தனிவேல் முனி, நம் குரு என்று
அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ?
உ ரு அன்று, அரு அன்று, உ ளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளi அன்று, என நின்றதுவே. (13)

கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்(று)
உ ய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்,
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே. (14)

முருகன், குமரன், குகன் என்று மொழிந்து,
உ ருகும் செயல் தந்து உ ணர்வு என்(று) அருள்வாய்?
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங் கவ எண் குண பஞ்சரனே. (15)

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு,
ஓரா வினையேன் உ ழலத் தகுமோ?
வீரா முதுசூர் பட, வேல் எறியும்
சூரா சுரலோக துரந்தரனே. (16)

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்,
தாமே பெற, வேலவர் தந்ததனால்,
பூமேல் மயல்போய், அறமெய்ப் புணர்வீர்
நாமேல், நடவீர் நடவீர் இனியே. (17)

உ தியா, மரியா, உ ணரா, மறவா,
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
வதி காவல் சூர பயங்கரனே. (18)

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோகியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளiப் படினே. (19)

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உ ரிதா உ பதேசம் உ ணர்த்தியவா
விரிதாரண விக்கிரம வேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே. (20)

கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்?
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுர சூர விபாடணனே. (21)

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளi பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே. (22)

அடியைக் குறியாது, அறியாமையினால்
முடியக் கெடவோ? முறையோ முறையோ,
வடி விக்ரம வேல் மகிபா குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே. (23)

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே. (24)

மெய்யே என வெவ்வினை வாழ்வை உ கந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ, முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே. (25)

ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான வினோத மனோ
தீதா சுரலோக சிகாமணியே. (26)

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்,
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே. (27)

ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது, தற்பரமே. (28)

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையுஞ் சுடர் வேலவனே. (29)

செவ்வான் உ ருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உ ணர்வித் ததுதான்,
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே? (30)

பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என, என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உ ளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. (31)

கலையே பதறிக், கதறித், தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையனே. (32)

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி, என்று விடப் பெறுவேன்?
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா முருகா கருணாகரனே. (33)

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல், எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்காநதி பால க்ருபாகரனே. (34)

விதிகாணும் உ டம்பை விடா வினையேன்,
கதிகாண, மலர்கழல் என்று அருள்வாய்?
மதிவாள் நுதல் வள்ளiயை அல்லது, பின்
துதியா விரதா சுரபூ பதியே. (35)

நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே. (36)

கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய், அடியோடும் அகந்தையையே. (37)

ஆதாளiயை, ஒன்று அறியேனை, அறத்
தீது ஆளiயை, ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே. (38)

மாஏழ் ஜனனம் கெட, மாயை விடா
மூஏடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங்கர தேசிகனே. (39)

வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி, மயங்கிடவோ?
சுனையோடு, அருவிற் றுறையோடு, பசுந்
தினையோடு இதணோடு திரிந்தவனே. (40)

சாகாது, எனையே சரணங்களiலே
கா, கா நமனார் கலகம் செயும்நாள்
வாகா முருகா மயில் வாகனனே
யோகா சிவஞான உ பதேசிகனே. (41)

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத், தனிவேலை நிகழ்த்திடலும்,
செறிவு அற்று, உ லகோ(டு) உ ரை சிந்தையும் அற்று,
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. (42)

துசா மணியும் துகிலும்f புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்,
ஆசா நிகளம் துகளாயின பின்,
பேசா அநுபூதி பிறந்ததுவே. (43)

சாடும் தனிவேல் முருகன் சரணம்,
சூடும்படி தந்தது சொல்லுமதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும் வெம்
காடும், புனலும் கமழும் கழலே. (44)

கரவாகிய கல்வி உ ளார் கடைசென்று
இரவா வகை, மெய்ப்பொருள் ஈகுவையோ?
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே. (45)

எந்தாயும், எனக்கு அருள் தந்தையும் நீ,
சிந்தாகுலம் ஆனவை தீர்த்fது எனையாள்,
கந்தா கதிர்வேலவனே உ மையாள்
மைந்தா குமரா மறை நாயகனே. (46)

ஆறு ஆறையும் நீத்து, அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உ ளதோ
சீறா வருசூர் சிதைவித்து, இமையோர்
கூறா உ லகம் குளiர்வித் தவனே. (47)

அறிவு ஒன்று அறநின்று, அறிவார் அறிவில்
பிரிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து இருளே சிதையே,
வெறி வென்ற வரோ(டு) உ றும் வேலவனே? (48)

தன்னந் தனி நின்றது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னம் களையும் கிருபை சூழ் சுடரே. (49)

மதி கெட்டு, அறவாடி, மயங்கி, அறக்
கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்?
நதி புத்திர ஞான சுகாதிப அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே. (50)

உ ருவாய் அருவாய், உ ளதாய் இலதாய்,
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்,
கருவாய் உ யிராய்க், கதியாய், விதியாய்க்,
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. (51)

7 கருத்துகள்: