செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

66 முதல் 75வரையான பாடல்கள்.

கல்லேய் மனமுங் கணையேய் விழியுங்
வில்லேய் நுதலும் பெறுமெல் லியர்வாய்ச்
சொல்லே பதமாய்த் துடிபட் டழிய
வல்லே னலனியான் மயில் வாகனனே. (66)

கலைகற் கினுமென் கவிபா டினுமென்
நிலைகற் கினுமென் னினைவந் துணராக்
கொலைகற் றிடுவோர் கொடுவஞ் சகமா
மலைகட் டறவென் றருள்வாய் குகனே. (67)

சனகா தியருக் கரியாய் தமியா
யெனகா ரணமா கவிரும் பினை நீ
கனகா சலவில் லிகளிக் கவரு
மனகா வலமா வமரர் பதியே. (68)

கல்லே னயலார் கவியைப் பொருளாய்ப்
புல்லே னவர்வாழ் வுபுரிந் தருள்வாய்
வல்லே யினிவந் தருளா யணியா
நில்லே னிறைநெஞ் சொடுவே லரசே. (69)

மஞ்சைப் புரையார் மதிதோன் றுதலால்
பஞ்சைப் பயில்தே வரொடிம் பர்களி
னெஞ்சைப் பிரியாய் நிகழ்மா மதியின்
பிஞ்சைப் புனையும் பெருமான் மகனே. (70)

விதிவந் தனைசெய் விமலன் கழலே
கதியென் றடைவார் கடனா வதுவே
பதிகண் பிணியோ டழிநல் குரவும்
மதிசஞ் சலமும் மண்ணாய் விடுமே. (71)

என்னேர முநின் னிருதாண் மலரைப்
பொன்னே யெனயான் புனையப் பெறுமோ
அன்னே யமுதே யயில்வே லரசே
கொன்னே பிறவிக் குறைபெற் றிடினே. (72)

அருளைத் தருநின் னடியிற் பணியார்
மருளைச் சிதையார் மதிகெட் டவர்தம்
குருளைத் தசையிற் குருவா வினவும்
பொருளைத் தெளியப் புகறே சிகனே. (73)

தொண்டா கியநந் துயர்தீ ருமருந்
துண்டா கியுமென் றுலைவாய் மனனே
வண்டார் குழல்வள் ளிமணந் தருளும்
தண்டா யுதவேள் சரணந் துதியே. (74)

அழியா நிலைதந் தருள்சே வலனே
விழியா லுணர்வார் விதமே புகல்வாய்
பழியார் புகழார் பழிநண் பிகழா
ரொழியா ரொழியா ருலகியா வையுமே. (75)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக